என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » குடிநீருடன் கழிவு நீர்
நீங்கள் தேடியது "குடிநீருடன் கழிவு நீர்"
குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதை கண்டித்து தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் நேரு நகர் ரெயில்வே கேட் அருகே பொதுமக்கள் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர்.
ராயபுரம்:
தண்டையார்பேட்டை நேரு நகரில் 12 தெருக்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 20 ஆண்டாக குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது.
இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. லாரிகள் மூலம் வழங்கப்பட்ட குடிநீரும் சரியாக வழங்கவில்லை.
இதனால் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் நேரு நகர் ரெயில்வே கேட் அருகே திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சமாதானம் செய்தனர்.
குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2-வது மற்றும் 3-வது தெருவில் பழைய குழாய்களை அகற்றிவிட்டு புதிய குழாய்கள் அமைக்கும் பணி நடந்தது. அதன்பின் அப்பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது.
இதனை கண்டித்து இன்று தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகரில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

×

X